ஸ்க்ரம் என்பது சிக்கலான தயாரிப்புகளை உருவாக்குவதற்கும் நிலைநிறுத்துவதற்கும் ஒரு கட்டமைப்பாகும். இந்த வலைப்பக்கத்தில் ஸ்க்ரம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த வரையறை ஸ்க்ரமின் பாத்திரங்கள், நிகழ்வுகள், ஆவணங்கள் மற்றும் அவற்றை ஒன்றிணைக்கும் விதிகளை உள்ளடக்கியது. கென் ஸ்சவாபர் மற்றும் ஜெஃப் சதர்லேண்ட் ஆகியோர் ஸ்க்ரம் கட்டமைப்பை உருவாக்கினர்; ஸ்க்ரம் வழிகாட்டி அவர்களால் எழுதப்பட்டு வழங்கப்படுகிறது. ஒன்றாக, அவர்கள் ஸ்க்ரம் வழிகாட்டியின் பின்னால் நிற்கிறார்கள்.